
K C Prabath : கே.சி.பிரபாத் தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பில்லா பாண்டி.
தல ரசிகனாக ஆர்.சுரேஷ் நடித்து இருந்த இந்த படத்தில் வில்லனாக இப்படத்தின் தயாரிப்பாளரான கே.சி பிரபாத் அவர்களே நடித்திருந்தார்.
ஆர்.கே சுரேஷுக்கு ஜோடியாக ஷாந்தினி மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்திருந்தனர். தல ரசிகர்கள் மத்தியில் பில்லா பாண்டி பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது.
ஆர்.கே சுரேஷ் மற்றும் கே.சி.பிரபாத்தின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டபட்டு வருகிறது. பில்லா பாண்டி படத்திற்கு பிறகு கே.சி பிரபாத் அவர்களுக்கு வில்லன் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள் பலரும் கே.சி பிரபாத் பில்லா பாண்டி படத்திற்கு பிறகு கோலிவுட்டில் புது வில்லனாக வலம் வருவார் என கருத்து கூறி வருகின்றனர்.
இப்படத்தின் நாயகன் ஆர்.கே சுரேஷ் தான் என்றாலும் படத்தின் உண்மையான ஹீரோ தல அஜித் தான் என்பது போல் ராஜ் சேதுபதி இப்படத்தை இயக்கி உள்ளார்.
நேற்று ரசிகர்களுடன் படத்தை பார்த்த ஆர்.கே சுரேஷ் இந்த படத்தை மனித கடவுள் தல அஜித்திற்கு சமர்ப்பணம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.