good quality oil
good quality oil

good quality oil :

🔸 நமது முன்னோர்கள்

நிலக்கடலையிலிருந்து கடலை எண்ணெய், கறுப்பு எள்ளிலிருந்து நல்லெண்ணெய், தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய்,

முத்துக்கொட்டையிலிருந்து விளக் கெண்ணெய், அரிசித் தவிட்டிலிருந்து தவிட்டு எண்ணெய், கடுகிலிருந்து கடுகு எண்ணெய் எனத் தயாரித்தார்கள்.

🔸 பொரிக்கவும், வறுக்கவும், கடலை எண்ணெய்.

🔸 தாளிக்க, சமைக்க.. உடல் தேஜஸைப் பொலிவாக்க, எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெய்.

🔸 வாய்ப்புண், வயிற்றுப்புண் சில குறிப்பிட்ட சமையலில் சுவைக்கு தேங்காய் எண்ணெய்.

🔸 உடல் உஷ்ணத்தைத் தணிக்கவும், உடலில் உள்ள அழுக்கை நீக்கவும் உள்ளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம்.

🔸 செக்கு முறையில் ஆட்டப்பட்ட எண்ணெய்களைத் தவிர்த்து ரீபைண்ட் எண்ணெய்களே இதயத்துக்கு வலுசேர்க்கின்றன என்பது தவறான கருத்து.

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய்கள் மாரடைப்பு, ரத்த அழுத்தத்தை உண்டாக்குகின்றன என்று தவறாக மக்களின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டனர் வியாபாரிகள்.

🔸 இந்தசமயத்தில்தான், இதய நோயை அண்டவிடாது, ரத்த அழுத்தமே வராது, நாள்முழுக்க உற்சாகத்துடன் வைத்திருக்கும்,

என்கிற ரீதியில் வருகிற அழகிய விளம்பரங்களைக் கண்டு மக்கள் ரீபைண்ட் ஆயில், டபுள் ரீபைண்ட் ஆயில் என்று மாறினார்கள்.

கலப்பட ரீபைண்ட் ஆயில்

🔸 சூரிய காந்தி எண்ணெய் உடலுக்கு நன்மையைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன் விதைகள் குறைந்த கொழுப்புச்சத்தைக் கொண்டவை.

இதயத்தில் எவ்வித அடைப்பும் உண்டாக்காது. ஆனால் சூரியகாந்தி எண்ணெய் எல்லாமே சூரியகாந்திப் பூக்களில் இருந்து மட்டுமே பெறப்படுவ தில்லை.

சூரியகாந்தி எண்ணெயுடன் குருடாயில் பாமாயிலும் உடலுக்கு நன்மை தருவதல்ல. வனஸ்பதி போன்று இதுவும் உடலுக்கு கெடுதல் தரக்கூடியதுதான்!

🔸 இயற்கை முறையில் ஆட்டும்பொது எள்ளிலிருந்து எண்ணெய் பிழிய கருப்பட்டியைச் சேர்ப்பார்கள்.

ஆனால் நவீன முறையில் இயந்திரங்கள் முறையில் பிழியப்படும் எண்ணெயில் சர்க்கரை ஆலையில் இருந்து பெறப்படும் கழிவைப் பயன்படுத்துகிறார்கள். இவை எண்ணெயின் சத்துக்களையும் சேர்த்தே வடிகட்டிவிடுகின்றன.

🔸 ரீபைண்ட் ஆயில் உபயோகிக்காமல்

செக்கிலிருந்து ஆட்டிய எண்ணெய்களை பயன்படுத்துங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here