ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள குட் நைட் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவின் அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் பீம் மணிகண்டன் முதலும் நீ முடிவும் நீ பட பிரபலம் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ் என பலர் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

படத்தின் கதைக்களம் :

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன் ( மோகன் ) குறட்டை பிரச்சனையால் அலுவலகம் நண்பர்கள் என அனைவரிடமும் அவமானப்படுகிறார். இதனால் அவரது காதலையும் பிரிந்து சென்றுவிட விரக்தியின் உச்சத்திற்கு செல்கிறார். இந்த சமயத்தில் தன்னை ராசி இல்லாதவள் என நினைக்கும் அணு ( மீதா ரகுநாத்) அறிமுகமாக இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணம் நடந்து முடிகிறது. முதலிரவில் தான் மணிகண்டனுக்கு குறட்டை பிரச்சனை இருக்கிறது என்ற விஷயம் அனுவுக்கு தெரிய வருகிறது. இதனால் அடுத்து நடந்தது என்ன என்பதுதான் இது படத்தின் கதைக்களம்.

அறிமுக இயக்குனராக இருந்தாலும் அழகான திரைக்கதை மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளார் இயக்குனர்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக தேர்வு செய்து அனைவரிடமும் சிறந்த நடிப்பை கொண்டுவந்துள்ளார்.

மணிகண்டன் மோகன் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார். மீதா ரகுநாத் பல இடங்களில் பேசாமலேயே தமது நடிப்பால் கைதட்டல்களை வாங்குகிறார்.

ரமேஷ் திலக், பக்ஸ் என படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.

REVIEW OVERVIEW
குட் நைட் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
good-night-movie-reviewமொத்தத்தில் குட் நைட் உங்களை மகிழ வைக்கும்.