Good News For Farmers
Good News For Farmers

Good News For Farmers : வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் சந்தை ஆண்டில், கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.285 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: தற்போதைய சந்தை ஆண்டில் 2019-2020 கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.275 ஆக உள்ளது .

அதன்படி வரும் சந்தை ஆண்டில் கரும்பின் கொள்முதல் விலை ரூ.285 ஆக இருக்கும் என்று கூறியுள்ளார்.

பொதுவாக கரும்பில் இருந்து எவ்வளவு சர்க்கரை எடுக்க முடியும் என்று மதிப்பிட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒரு குவிண்டாலுக்கு 10 சதவீதம் சர்க்கரை கிடைக்க வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் 9.5 சதவீதத்திற்கு இருந்தால் கொள்முதல் விலை ரூ. 270.75 ஆக இருக்கும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.