குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படம் 2025 பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது 2025 மே மாதம் வெளியாகப் போவதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்னும் வெளியாகாத நிலையில் பொறுத்திருந்து பார்க்கலாம்.