குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் படக்குழு மௌனம் காத்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், குட் பேட் அக்லி என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இன்று இந்த படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள் என்பதால் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது.

அதில் இந்தப் படம் 2025 பொங்கல் அன்று வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.