திரைப்பயணத்தில் 32 வருடங்களில் கடந்துள்ளார் நடிகர் அஜித்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமா பயணத்தை தொடங்கிய அஜீத் விடாமுயற்சியால் திரைத்துறையில் ஒரு விஸ்வரூப வெற்றி பெற்றிருக்கிறார் என்பதே உண்மை.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக குட் பேட் அக்லி படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு உள்ளது.
இந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.