Gomathi Marimuthu
Gomathi Marimuthu

Gomathi Marimuthu : 23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது.

பல்வேறு விதமாக போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா, சீனா, ஜப்பான், இரான் உள்ளிட்ட 43 நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், திங்கட்கிழமை நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து இலக்கை 2:02.70 நேரத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

மேலும், இந்த தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கமாகவும் இது அமைந்தது.

ஓட்டப்பந்தயம் தொடங்கியபோது ஆறாவது இடத்தில் இருந்த கோமதி, பிறகு வேகமாக மட்டுமின்றி சாதுர்யமாக செயல்பட்டு இரண்டு இலங்கை வீராங்கனைகளை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய கோமதி,

கடைசி 200 மீட்டரில் கஜகஸ்தான் மற்றும் சீனாவை சேர்ந்த வீராங்கனைகளை கடந்து முதலிடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

30 வயதாகும் கோமதி தான் பங்கேற்கும் மூன்றாவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.

இதற்கு முன்னர் 2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டிகளில் பங்கேற்ற கோமதியால் முறையே ஏழு மற்றும் நான்காவது இடத்தையே பெற முடிந்தது.

தங்கம் வென்றதை அடுத்து தங்க மகளுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

எப்படி பட்ட வறுமையில் இருந்து இவர் சாதித்து இருக்கிறார் என்பதை தெரிந்த பிறகு தமிழக இளைஞ்சர்கள் அனைவரும் இவரை ஒரு முன்னுதாரணமாக கொண்டு வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.