Gomathi Marimuthu Fails Dope Test Twice | Winning an Asian gold | India | Gomathi Marimuthu | Doha Asians | Steroid | Latest News

Gomathi Marimuthu Fails Dope Test Twice :

சமிபத்தில் இந்திய தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, இவருக்கு வயது 30. இவ‌ர் தமிழகத்தை சேர்ந்தவர் சமீபத்தில் தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 800 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் பலதரப்பின‌ரிடம் இருந்து பாராட்டுக்களும் பரிசு தொகையும் வழங்கப்பட்டத்து. மேலும் தமிழகத்தை சேர்த்த இவர் தங்கம் வென்றது மேலும் சிற‌ப்பு.

தற்போது அந்த பெருமைக்கும் கோமதி மாரிமுத்துவிற்கும் இப்பொழுது சோதனை வந்து உள்ளது.

இந்தப் போட்டியின்போது இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், ஸ்டெராய்டு என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தெரிகிறது.

இவர் தற்காலிகமாக ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிய கால்பந்து தொடரின் சென்னை டிரா!

கோமதியின் ‘பி’ மாதிரியிலும் ஊக்கமருந்து கலந்திருப்பது தெரியவந்தால், இவர் நான்கு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம். ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற பதக்கமும் பறிபோகலாம்.

ஆனால் இச்செய்தியை கோமதி தரப்பினர் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக, கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி கூறுகையில்,

கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.