Gomathi Marimuthu
Gomathi Marimuthu

Gomathi Marimuthu :  சென்னை: ஆசிய தடகள போட்டியில் தங்கபதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு வழங்க உள்ளதாக அதிமுக சார்பில் அறிவித்துள்ளது.

கத்தார் தலைநகர் தோஹாவில் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில், தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில் வீராங்கனை கோமதிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கோமதிக்கு, திமுக சார்பில் ரூ.10 லட்சம், காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

அதோடு பிரபலங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் அவருக்கு நிதியுதவி தர முன்வந்துள்ளனர்.

இந்நிலையில் ‘தங்கபதக்கம் வென்ற வீராங்கனை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ. 15 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்’ என அதிமுக அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.,