Golden Globe Website Story About Master

இந்திய சினிமாவின் மறுமலர்ச்சி மாஸ்டர் திரைப்படம் என கோல்டன் குளோப் வெப் சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Golden Globe Website Story About Master : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடியது. கொரானா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகளுக்கு மக்கள் வர பயந்த காலகட்டத்தில் அவர்களை கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு படையெடுக்க வைத்த திரைப்படம் என்றால் அது மாஸ்டர் தான். திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் என அனைவரும் மாஸ்டர் திரைப்படத்தில் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது பிரபல பத்திரிக்கையான கோல்டன் க்ளோப் வெப்சைட்டில் மாஸ்டர் திரைப்படம் பற்றி ஒரு பதிவு வெளியாகியுள்ளது. அதில் மாஸ்டர் திரைப்படம் இந்திய திரையுலகில் மறுமலர்ச்சி திரைப்படம் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. இந்த பதிவு விஜய் ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Attachments area