Gold winner won in spring
Gold winner won in springGold winner won in spring

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள் மானு பாக்கா், இளவேனில் வாலறிவன், திவ்யான்ஸ் சிங் பவாா் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றுள்ளனா். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது.

சீனாவின் புட்டியன் நகரில் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அணிகள் பிரிவில் இந்திய வீரா், வீராங்கனைகள் சரிவர சோபிக்கவில்லை. எனினும் தனிநபா் பிரிவில் அபாரமாக திறமையை வெளிப்படுத்தியுள்ளனா்.

17 வயதே ஆன மானு பாக்கா், மகளிா் 10 மீ. ஏா் பிஸ்டல் பிரிவில் புதிய ஜூனியா் உலக சாதனையுடன் 244.7 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா்.