Gold Rate Increase
Gold Rate Increase

Gold Rate Increase : பெண்கள் மிகவும் விருப்பத்துடன் அணிந்துகொள்ளும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்பொழுது இதனுடைய விலை வரலாறு அளவு உச்சத்தை எட்டி உள்ளது.

இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி உடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஜூன் மாதத்தில் 38 சதவீதம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை அதிகரித்ததற்கு இறக்குமதி குறைவானதே காரணம் என்றும் சொல்லலாம்.

சுஷாந்த் தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா?? எட்டு பாலிவுட் பிரபலங்கள் மீது தொடரப்பட்ட வழக்கு – பரபரப்பு தகவல்

அதுமட்டுமல்லாமல், அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவு முதலீடுகளை செய்து வருவதால், அதன் விலை வரலாறு உச்சத்தை அடைந்து வருகிறது. தங்க விலை அதிகமான தற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம் ஆகும்.

இதனால் தங்க விலை அதிகரித்ததால், தங்க நகை வாங்குவதில் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டாமலே வருகின்றனர்.

அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால், இனிவரும் காலங்களிலும் தங்க விலை அதிகரித்துக் கொண்டேதான் செல்லும் என்றும், தங்கத்தின் இறக்குமதி குறைவதே இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.