
சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கம் கொண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையில் தினமும் மாற்றம் உண்டாகிறது.
Gold Price 04.12.19 : சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம், சவரனுக்கு 32 காசுகள் குறைந்து, ரூ 28,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 காசுகள் குறைந்து, ரூ 3,623-க்கு விற்பனையாகிறது.
மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை: 1 கிராமிற்கு ரூ.3,952 ஆகவும் மற்றும் சவரனுக்கு ரூ.31,616 ஆகவும் விற்பனையாகிறது.
நேற்றைய விலையில், 1 கிராமிற்கு 3,957 ரூபாய் ஆகவும், 8 கிராமிற்கு 31,656 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.
வெள்ளி விலை நிலவரம்: இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து, 1 கிராம் ரு.47.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று, 1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 100 ரூபாய் அதிகரித்து, ரு.47,700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.