Gobi Parota : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Gobi Parota :

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – ஒரு கப், காலிஃப்ளவர் துருவல் – கால் கப், வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 1, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
கரம் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1) கோதுமை மாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடிவைக்கவும்.

வாழ்க்கை புல்லா ஒருத்தரோட வாழ முடியாது, வருஷத்துக்கு ஒருத்தரோட… – ஸ்ரீ ரெட்டியின் சர்ச்சை பதிவு.!

2) துருவிய காலிஃப்ளவருடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே ஸ்டஃபிங் ஆகும்.

3) பிறகு, மாவை சற்று பெரிய உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வோர் உருண்டையையும் கிண்ணம் போல செய்து, அதன் நடுவே ஒரு டேபிள்ஸ்பூன் காலிஃப்ளவர் ஸ்டஃபிங் வைத்து, நன்றாக இழுத்து மூடவும்.

4) பின்னர் சற்றுக் கனமான பராத்தாக்களாகத் தேய்த்து, வேகவிட்டு எடுக்கவும்.

5) சுவையான கோபி பராத்தா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here