Goat Movie Top star Prashanth's salary Update
Goat Movie Top star Prashanth's salary Update

கோட் படத்தில் நடித்த டாப் ஸ்டார் பிரசாந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம்,கல்பாத்தி எஸ் சுரேஷ் , கல்பாத்தி எஸ் கணேஷ்,ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். இதற்கு முன் இவரது நடிப்பில் வெளியான அந்தகன் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெகா ஹிட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கோட் படத்தில் நடித்த டாப் ஸ்டார் பிரசாந்த் சுமார் 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தப் படத்திற்கான டிக்கட்டுகள் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேல் விற்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ரீ புக்கிங் படமாக கோட் இருப்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் இந்தப் படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.