கோட் படத்தின் கதை லீக்கானதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் பிரசாந்த் ,மீனாட்சி சாவித்திரி, சினேகா, போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளன. இது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் வெளியாகி மக்கள் கவனத்தை ஈர்த்தது.
இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் கதை லீக்காகி உள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தை மையமாக வைத்து இந்த கதை உருவாகியுள்ளதாகவும், குண்டு வைப்பது யார்?அதை எப்படி விஜய் தடுக்கிறார்? அதன் பின்னணி என்ன என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதே படத்தின் கதை என கூறப்படுகிறது.
இணையத்தில் இந்த தகவல் வெளியாகி படுவ வைரலாகி வருகிறது. இது மட்டும் இல்லாமல் இந்த கதை எந்த அளவிற்கு உண்மை என்று படம் ரிலீஸான பின்னரே தெரியும்.