கோட் படத்திலிருந்து ஸ்பார்க் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் பிரபுதேவா ,மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், சினேகா போன்ற பிரபலங்களும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு பட குழு ஸ்பார்க் என்ற பெயரில் லிரிக் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.