இன்று மாலை கோட்படத்திலிருந்து ஸ்பார்க் லிரிக் வீடியோ வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த ஒருவர் விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில்,AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி, பிரஷாந்த், சினேகா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படியான நிலையில் இந்த படத்தில் இருந்து ஸ்பார்க் என்ற பேயரிடப்பட்டுள்ள லிரிக் வீடியோ இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இது விஜய் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.