கோட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகி பாபு, லைலா, போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில் இந்தப் படத்தின் சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது கோட் படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் தான் என்றும், அப்பா கதாபாத்திரத்திற்கு ரஜினிகாந்த நடிக்க இருந்ததாகவும் தகவல் கசிந்து உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.