கோட் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும்,ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாக்கி வருகிறது.
இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் நிலையில், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
அந்த வகையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. மிரட்டலாக இருக்கும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.