goat movie collection details
goat movie collection details

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் வசூலில் தூள் கிளப்பி உள்ளது கோட்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கூற்ற என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பு உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சினேகா, லைலா ,பிரசாந்த் பிரபுதேவா, யோகி பாபு, பார்வதி நாயர் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஐந்தாயிரம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் வசூலில் மிரட்டி வருகிறது. ஆனால் தற்போது வெளிநாட்டில் கோட் படத்தின் வசூல் என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு நாட்களில் கோட் படம் வெளிநாட்டில் 67 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.