கிளைமாக்ஸ் இல் தலன்னு சொன்னது யாரை என்ற விளக்கம் கொடுத்துள்ளார் கோட் படத்தின் எடிட்டர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பு உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் சினேகா, லைலா ,பிரசாந்த் பிரபுதேவா, யோகி பாபு, பார்வதி நாயர் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ஐந்தாயிரம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் வசூலில் மிரட்டி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நீ யாருடைய பேன் என்று விஜய் கேட்டதும் அவரது மகள் தல என்று கூறுவார் அப்படி சொன்னது, தோனியா,? இல்லை அஜித்தா? என்ற சந்தேகம் ரசிகர்களுடைய இருந்து வந்தது அந்த வகையில் இந்த படத்தின் எடிட்டர் வெங்கட் தல என்று சொன்னது அஜித்தை தான் என்பதை உறுதி செய்துள்ளார்.
இதனால் ரசிகர்களுக்கு இருந்த சந்தேகம் தீர்ந்துள்ளது.