கோட் படத்துடன் இரண்டு படங்கள் மோத உள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் கோட் படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மதகஜராஜா படமும் அதே தேதியில் வெளியாகிறது.
இது மட்டுமில்லாமல் சந்தானம் நடிப்பில் உருவாகிய உள்ள சர்வர் சுந்தரம் திரைப்படமும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் விஷால் மற்றும் சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.