கோட் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த படம் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளனர். குறிப்பாக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, மோகன், யோகி பாபு, லைலா ஜெயராம், பிரேம்ஜி அமரன், போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மனதை மிகவும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், இந்தப் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக புதிய போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்தப் பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.