இசை வெளியீட்டு விழா குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் சினேகா ,பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்திரி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது அதற்கு அவர், ஒரு விஜய் ரசிகனா நானும் அதுக்கு தான் காத்திருக்கிறேன்.அதை விஜய் சார் தான் சொல்ல வேண்டும் அவர் முடிவு தான் எதுவாக இருந்தாலும் இன்னும் சில நாட்களில் வெளியாகும் எனவும் இருக்கு இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் சொல்லியுள்ளார்.
இவரின் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.