Khel Ratna Award Winner List
Khel Ratna Award Winner List

Khel Ratna Award Winner List : மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த உயரம் தாண்டுதலில் வீரர் மாரியப்பன் தங்கவேலு இந்த ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவரோடு இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா ஆகியோரது பெயரும் அந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு அமைச்சகத்தை சேர்ந்த 12 பேர் கொண்ட தேர்வுக் குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. அதே போல் இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா உள்ளிட்ட 29 பேரின் பெயர்கள் இந்த ஆண்டிற்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளை பெறுவோருக்கு வரும் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று விருது வழங்கப்பட உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.