வெந்து தணிந்தது காடு படத்தின் Glimpse வீடியோ வெளியாகியுள்ளது.

Glimpse Video of Vendhu Thaninthathu Kaadu Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெகு விரைவில் ரிலீஸாக உள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தினை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பெங்காலி நடிகை ஒருவர் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சிம்பு கையில் துப்பாக்கியுடன் இருக்கும் மாஸ் கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. இதனையடுத்து இந்த படத்தின் Glimpse வீடியோ இன்று மதியம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது இந்த படத்தின் Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.