GK Vishnu Marriage Photos

மெர்சல் பிகில் உட்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜி கே விஷ்ணு அவர்களுக்கு திருமணம் முடிந்துள்ளது‌.

GK Vishnu Marriage Photos : தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல், பிகில் மற்றும் தெலுங்கில் வெளியான கிராக் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் G.K.விஷ்ணு.

இவருக்கு P.மஹாலக்‌ஷ்மி என்பவருடன் இன்று (25-04-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் இவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்றது. விஜய் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் ஜி கே விஷ்ணு திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.