Girls fans show for NGK in Malabar : Suriya, Sai Pallavi, Selvaraghavan, Rakul Preet Singh, Yuvan | Kollywood | Tamil Cinema

Girls fans show for NGK in Malabar :

மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அஜித்தின் சொந்த ஊரிலே மாஸ் காட்டும் தளபதி – வைரல் புகைப்படம்.!

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைதொடர்ந்து தற்போது இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.

இது ஒருபக்கம் இருக்க மலபாரில் இந்த படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம். இது சூர்யாவின் பெண் ரசிகர்கள் பலத்தை இன்னும் பலமடங்கு உணர்த்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.