lion

அமெரிக்காவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் மிக அருகே ஒரு பெண் சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

உயிரியல் பூங்காக்களில் சிலர் தவறி விழுந்து சிங்கத்தினால் கொல்லப்படுவதும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புவதும் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் அமெரிக்கா நியுயார்க் நகரில் பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு சிங்கம், புலி உள்ளிட்ட பல காட்டு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு சிங்கம் இருக்கும் பகுதியில் ஒருபெண் வேலியை தாண்டி குதித்து உள்ளே சென்றார். அப்போது ஒரு ஆண் சிங்கம் அவரின் மிக அருகில் வந்து நின்றது. ஆனால், அப்பெண் கொஞ்சம் கூட பயப்படாமல் சிங்கத்திற்கு ஹாய் சொல்வது போல கை காட்டினார். மேலும், சிங்கத்தின் முன்பு நடனமும் ஆடினார்.  ஆனால், அதிர்ஷ்டவசமாக சிங்கம் அவரை எதுவும் செய்யவில்லை. இதை அங்கு சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். சிலர் அவரின் தைரியத்தை பாராட்டினாலும், பலரும் அவரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவர் மீது தற்போது பூங்கா நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.