Girish Karnad Passed Away : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Guna Tamil Movie | Kathalan

Girish Karnad Passed Away :

பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 81.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரிஷ் கர்னாட்டின் பல உடல் உறுப்புகள் செயலிழந்தால் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.

1938-ஆம் ஆண்டு பிறந்த கிரிஷ் கர்னாட் 60-களில் கன்னட நாடக துறையில் கால்பதித்து அதில் பல புதுமையை புகுத்தினார்.

தனி ஒருவன் 2 குறித்த சீக்ரெட்டை வெளியிட்ட மோகன் ராஜா – மரண மாஸ் தான்.!

பின்னர் 70-களில் திரைப்படத் துறையில் இயக்குநராக பணியாற்றியவர், தமிழில் குணா, காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் மிஷ்கினின் முகமூடி, சூர்யாவின் 24 ஆகிய படங்களிலும் இவர் நடித்திருந்தார்.

இவர் 10 தேசிய விருதுகளை வென்றவர். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

கிரிஷ் கர்னாட்டின் ராக்ட் கல்யாண்ட் காலம் கடந்தும் சிறந்த நாடகமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிரிஷ் கர்னாட்டின் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பாக நாசர், மற்றும் நடிகர்கள் கமல் ஹாசன், ராணா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் கர்னாட்டின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.