துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்த சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் ஜிப்ரான்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரிக்க மஞ்சுவாரியர் சமுத்திரகனி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

துணிவு பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் இது தான்.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட ஜிப்ரான்.. வைரலாகும் போட்டோ

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கிய நிலையில் அஜித் இந்த படத்தின் டப்பிங்கை நிறைவு செய்து விட்டார் என அறிவிப்பு நேற்று வெளியானது.

இதனைத் தொடர்ந்து ஜிப்ரான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்து பதிவு செய்துள்ளார். சில்லா சில்லா என்ற பாடலை அனிருத் ரெக்கார்ட் செய்து விட்டார். இந்த பாடலை விஷாக் என்பவர் எழுதியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

துணிவு பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் இது தான்.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட ஜிப்ரான்.. வைரலாகும் போட்டோ

இதனால் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.