Ghilli updates

Ghilli updates : தமிழ் சினிமாவோட தி பெஸ்ட் கமர்ஷியல் படம் எதுன்னு கேட்டா எல்லாரும் டக்குன்னு சொல்ற படம் பாட்ஷா.

கொஞ்ச சமீப காலத்துக்கு முன்னாடி வந்த படம்னு கேட்டா உடனே கில்லிய சொல்வாங்க. கமர்ஷியல் படங்களோட கில்லியா இருக்க இந்த படம் வெளியாகி 15 வருஷம் நிறைவடைஞ்சிருக்கு.

2003-ல மகேஷ் பாபு நடிப்பில தெலுங்குல வெளியான ஒக்கடு படத்த பார்த்த விஜய், அதை தமிழ்ல ரீமேக் செய்ய திட்டமிட்டாரு.

Ghili updates
Ghili updates

சீன் பை சீன் தெலுங்கு படத்தையே மாத்தி எடுத்திருந்தாலும் தெலுங்க விடவும் தமிழ்ல தான் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு பண்ணுச்சு.

அதுவரையிலான தமிழ் சினிமாவோட எல்லா வசூல் சாதனைகளையும் முறியடிச்ச கில்லி, தென்னிந்திய அளவில முதல் முறையா 50 கோடி வசூல் செஞ்ச படமுங்கற சாதனையையும் படைச்சிச்சு.

கூடவே விஜய்யை தமிழ் சினிமாவோட புது வசூல் சக்கரவர்த்தியாவும் மாத்துச்சு. ’அடுத்த சூப்பர் ஸ்டார்’ விஜய் தாங்குற விவாதம் தொடங்குனதும் இந்த படத்தோட வரலாறு காணாத வெற்றிக்கு அப்புறம் தான்.

இப்படிப்பட்ட படம் வெளியான நாள் இன்று என்றால் விஜய் ரசிகர்கள் சும்மாவா விடுவார்கள்.

தற்போது இதை டிவிட்டரில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். 15 வருடம் அல்ல இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் விஜய் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடம் பிடித்த ஒரு படம் கில்லி.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.