
Genius Tamil Review : சுசீந்திரன் இயக்கதில் ரோஷன் தயாரித்து நாயகனாக நடித்த இன்று வெளியாகியுள்ள படம் ஜீனியஸ்.
இந்த படத்தின் நாயகியாக ப்ரியா லால் நடிக்க ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க தாடி பாலாஜியும் ஈரோடு மகேஷும் ஒரு சில காட்சிகளில் மட்டும் தலை காட்டியுள்ளனர்.
படத்தின் கதை :
தயாரிப்பாளரான ரோஷன் முதல் முறையாக இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாக்கியுள்ளார்.
வித்தியாசமான மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார். செவிலியராக பணியாற்றி வரும் நாயகி பிரியா லால் கடத்தப்பட்டு கொடுமைப்படுத்தி விபசார பெண்ணாக மாற்றப்படுகிறாள்.
ரோஷனின் அப்பாவாக ஆடுகளம் நரேனும் அம்மாவாக மீரா கிருஷ்ணனும் நடித்துள்ளனர். சிறுவயதில் இருந்தே பல்வேறு துறைகளிலும் நாட்டம் கொண்டு பள்ளியில் சிறந்த மாணவராக பல பதக்கங்களை தட்டி செல்கிறார் ரோஷன்.
தன்னுடைய மகனின் அபார திறமையை பார்த்து தந்தையான ஆடுகளம் நரேன் ரோஷனை உலகத்திலேயே சிறந்த படைப்பாளியாக மாற்றுவேன் என கூறி எந்நேரமும் படிப்பு படிப்பு என சற்றும் ஓய்வில்லாமல் படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த வைக்கிறார்.
படிப்பை தவிர வேறு எந்தவித துறையிலும் சரி பொழுதுபோக்கிலும் சரி ஈடுபாடு இல்லாமல் பிடிப்பை முடித்து வேலைக்கு சென்று வேலை பளுவால் ஒரு கட்டத்தில் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகிறார் ரோஷன்.
இதனையடுத்து ரோஷனுக்கும் விபசார பெண்ணாக மாறிய நாயகி ப்ரியா லாலுக்கும் இடையே எப்படி காதல் உருவாகிறது. ரோஷன் மீண்டும் பழைய நிலைக்கு எப்படி வருகிறார். ப்ரியா லாலை ரோஷன் திருமணம் செய்கிறாரா? என்பதை வித்தியாசமான திரைக்கதையில் கொடுத்துள்ளார் சுசீந்திரன்.
இசை:
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை வழக்கம் போல இந்த படத்திற்கும் பலம் சேர்த்துள்ளது. பாடல்கள் நமக்கு மீண்டும் பள்ளி பருவத்தை நம் கண் முன் கொண்டு வருகிறது.
தொழில் நுட்பம்:
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு பணிகளை செய்ய தியாகு எடிட்டிங் பணிகளை செய்துள்ளனர். இருவரும் அவரவர் வேலைகளை சரியாக செய்து கொடுத்துள்ளனர்.
தம்பஸ் அப் :
படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்ற படத்தின் மைய கரு.
பெற்றோர்கள் உணர வேண்டியதை சொல்லும் விதம்.
யுவன் ஷங்கர் ராஜா இசை
தம்பஸ் டவுன்:
திரைக்கதையின் விறுவிறுப்பு
சிங்கம் புலியின் காமெடி