சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையான காயத்ரி யுவராஜ் புதிதாக செய்ய தமிழில் வெளியாக இருக்கும் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் உள்ள பிரபல நடிகைகளில் ஒருவர்தான் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல தொலைக்காட்சி களான சன் டிவி* விஜய் டிவி* ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர்.

புதிய சீரியலில் இணைந்துள்ள காயத்ரி யுவராஜ் - வெளியான தகவல்.

அந்த வகையில் காயத்ரி தற்போது நடித்திருந்த சீரியல் தான் “நாம் இருவர் நமக்கு இருவர்”. இந்த சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்து விட்டது.

புதிய சீரியலில் இணைந்துள்ள காயத்ரி யுவராஜ் - வெளியான தகவல்.

இதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற பிரபல  சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆரியன் தற்போது ஜீ தமிழில் கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய சீரியலில் காயத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.