குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான தங்கம், வெள்ளி பொருட்களின் கலெக்ஷன்களை பார்த்து வியந்துள்ளார் காயத்ரி.

சென்னையில் தி நகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக மிகப்பெரிய பிரத்தியேக ஷோ ரூம்களை கொண்ட நிறுவனம் தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.

எங்கும் இல்லாத அளவிற்கு விசாலமான பார்க்கிங் வசதி, தரமான நகைகள், சரியான விலை என்ன மக்களிடையே நம்பிக்கை மிக்க கடையாக இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த கடையில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர். அதேபோல் யூட்யூப் பிரபலங்களில் சிலர் ஷாப்பிங் செய்த வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம்.

இந்த நிலையில் தற்போது சின்னத்திரை சீரியல் பிரபலமான காயத்ரி தன்னுடைய மாமனார் உடன் இணைந்து இந்த கடையில் தனது அண்ணன் திருமணத்திற்காக நகைகளை வாங்கி உள்ளார். அப்படியே என்னென்ன நகைகள் உள்ளன? எவ்வளவு டிசைன்கள் உள்ளன என்பது பற்றியும் பேசியுள்ளார். தங்க நகைகளில் ஆண்டிக் ஜூவல்லரி முதற் கொண்டு அனைத்து விதமான நகைகள் கிடைக்கின்றன.

முதலில் ஜிமிக்கி கம்மலில் ஆரம்பித்து திருமண அலங்கார நகைகள் வரை அனைத்தையும் அணிந்து பார்த்து அது குறித்து பேசியுள்ளார். ஜிமிக்கி கம்மல், எண்ணிலடங்காத எக்கச்சக்கமான டிசைன்களில் மோதிரங்கள், வளையல் என இரண்டும் சேர்ந்து வரும் மெஹந்தி வளையலையும் அணிந்து பார்த்துள்ளார்.

ஜிமிக்கி கம்மலில் ஒரு அழகிய குழந்தை உடை அணிந்து இன்னும் அழகாக இருக்கும் டிசைனை பார்த்து வியந்துள்ளார். அந்த ஜிமிக்கி கம்மலின் வேலைப்பாடுகள் சூப்பராக இருக்கு என தெரிவித்துள்ளார். ‌

அப்படியே தங்கத்தில் செய்யப்பட்டு விற்பனைக்கு உள்ள தங்க பூஜை பாத்திரங்களையும் பார்த்து வியந்து போய் உள்ளார். ‌ அதன் பிறகு தன்னுடைய மகனுக்கும் தனக்கும் ஜெயின் வாங்கியுள்ளார். படங்களில் வரும் நாட்டாமை அணியும் செயின் வில்லன்கள் அணியும் செயின் போன்றவற்றையும் அணிந்து பார்த்து அழகு பார்த்துள்ளார். ஒரு செயின் மட்டுமே 20 பவுனுக்கு வருதுனா பாருங்களேன்.

மேலும் குழந்தைக்கு ஏற்றார் போல குறைந்த விலையில் வேலைப்பாடுகள் நிறைந்த செயின்கள் இங்கு கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளியிலான குடம், பூஜை பொருட்கள், குத்து விளக்குகள், கை வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள் என அனைத்தை பற்றியும் விளக்கம் அளித்துள்ளார். சிறிய பொருட்கள் முதல் மிகப்பெரிய பொருட்கள் வரை அனைத்தும் வெள்ளியில் கிடைக்கின்றன. 92.5 பியூரிட்டி கொண்ட வெள்ளி பொருட்கள் தான் இந்த கடையில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியில் 5 முகம் கொண்ட விளக்கு, 9 லட்சுமி உருவங்கள் பொறித்த விளக்கு என அதிலும் நிறைய கலெக்ஷன்கள் உள்ளன.

அதுமட்டுமல்லாமல் திருமண செட் நகைகளை அணிந்து பார்த்துள்ளார். இந்த நகைகளை அணிந்து கொண்டு இதுக்கும் பில்லு கட்டிடுங்க மாமா என தன்னுடைய மாமனாரிடம் சொல்ல அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த கலக்கலான ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.