பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நானும் கலந்து இருக்க வேண்டியது ஆனால் கலந்துகொள்ளவில்லை என படத்தில் நடித்துள்ள நடிகை தெரிவித்துள்ளார்.

Gayathri Shan About Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 5-ல் நானும் கலந்து இருக்க வேண்டியது... ஆனால்?? பீஸ்ட் பட நடிகை வெளியிட்ட தகவல்

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காயத்ரி ஷான். கேரளாவில் இருந்து வந்த இவர் ஒரு இலங்கைத்தமிழர். இந்த படத்தில் நடித்தபோது தளபதி விஜய் இடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். கமல் சார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தானே என கேட்டார். கலந்துகோங்க நல்ல விஷயம் என கூறினார்.

பிக் பாஸ் சீசன் 5-ல் நானும் கலந்து இருக்க வேண்டியது... ஆனால்?? பீஸ்ட் பட நடிகை வெளியிட்ட தகவல்
ஆஸ்தியேலிய கிரிக்கெட் அணிக்கு, கேப்டன்-துணை கேப்டன் நியமனம்

அதன் பிறகு நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என கூறியதும் அப்படியா சரி ஓகே என சொல்லி விட்டார். மேலும் அவர் என்னிடம் எங்கள் வீட்டில் என் மனைவி பேசும் ஸ்லாங்கில் நீங்களும் பேசுகிறீர்கள் என கூறியதாக தெரிவித்துள்ளார். தளபதி விஜய் மனைவியும் இலங்கையைச் சேர்ந்த தமிழர் என்பதால் அவர் இவ்வாறு தெரிவித்ததாக காயத்ரி ஷான் கூறியுள்ளார்.

Jai Bhim -க்கு அடுத்து இந்த படம் தான் – Maanaadu DAY 2 Public Review | Simbu | STR | SJ Suriya