Gayathri Raguram says Kamal is a Terrorist :
கமல் தனது பிரச்சாரத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசியதற்கு காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
உச்சக்கட்ட சந்தோஷத்தில் நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் – ஏன் தெரியுமா?
தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.
இதில் முதல் சீசனில் பங்கேற்றவர் காயத்ரி ரகுராம். நேற்று கமல் தனது பிரச்சாரத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசியதற்கு இவர் தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கமல் ஒரு தீவிரவாதி என்றும் சமூக வலைதளத்தில் அவர் பொங்கியுள்ளார்.
இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.