Gayathri Raghuram vs Tamilisai Soundarajan
Gayathri Raghuram vs Tamilisai Soundarajan

Gayathri Raghuram vs Tamilisai Soundarajan – சென்னை: “காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை, வேண்டுமென்றல் டெல்லிக்கே போய் அவர் புகார் சொல்லட்டும்”,

என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பார்ட்டிக்கு சென்ற காயத்ரி ரகுராம், நள்ளிரவில் காரில் திரும்பி வந்த போது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது குடிபோதையில் காரை ஓட்டினார் என்று ,போலீசார் ஃபைன் கேட்ட தகவல்கள் தீயாக பரவின.

அதற்கு, காயத்ரி ரகுராம், விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “தன்மீது இதுபோன்ற அவதூறு பரப்பப்படுவதற்கு தமிழக பா.ஜனதாவில் நிலவும் உள்கட்சி பூசலே காரணம்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து காயத்ரி இவ்வாறு கூறியதால், சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது .

இந்நிலையில், இதை பற்றி் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை.

வேண்டுமானால் அவர் டெல்லிக்கே போய் இதைப்பற்றி புகார் சொல்லட்டும்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கு காயத்ரி, தனது ட்விட்டர் பக்கத்தில் நேரடியாக தமிழிசைக்கு கோபமாக பதிலளித்தார். அதில் அன்புள்ள தமிழிசை மேடம், நான் பாஜவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி மூலமாக.

நீங்களாக யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ இயலாது. இது ஒரு தேசியக் கட்சி என்று அவேசமாக பதிலளித்தார்.

இவ்வாறு பதில் கூறிய அவர், மேலும் “தான் பாஜாகவில் இருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள்.

மேலும், உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும், நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை” இவ்வாறு கூறினார்.