Gayathri Raghuram As CM

பிக்பாஸ் காயத்ரி ரகுராம் முதல்வராக இருப்பதாக தகவல் கிடைத்தது.

Gayathri Raghuram As CM : தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் காயத்ரி ரகுராம். பிரபல நடன இயக்குனரான இவர் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு மோசமான விமர்சனங்கள் தான் கிடைத்தன.

சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். ஆனால் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.