மத்திய அரசை எதிர்ப்பதை விட்டுவிட்டு எல் முருகனை கொண்டாடுங்கள் என சூர்யா, கார்த்தி மற்றும் விஷாலுக்கு காயத்ரி ரகுராம் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

Gayathri Raghuram Advice to Tamil Actors : மத்திய அரசு புதியதாக கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு சட்டத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கருத்து சுதந்திரம் இருக்காது என கூறி வருகின்றனர். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசை எதிர்ப்பதை விட்டுவிட்டு எல் முருகனை கொண்டாடுங்கள் - சூர்யா, கார்த்தி மற்றும் விஷாலுக்கு தமிழ் நடிகை அட்வைஸ்.!!

இந்த நிலையில் தற்போது நடிகையும் பிஜேபியை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எல் முருகனை கொண்டாடுங்கள் என சூர்யா, கார்த்தி மற்றும் விஷாலுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

விஜயகாந்த்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

இது குறித்த அவரது பதிவில் தமிழ்நாட்டிலிருந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு இணை மத்திய அமைச்சராக திரு. டாக்டர்.எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார், இதை நம் சினிமா துறையினர் கொண்டாட வேண்டும். அனைத்து தொழிற்சங்க, நடிகர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் கவுன்சில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். முதல்வரிடம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் ஆதரவைப் பெறுவதற்கும் பதிலாக, #cinematographact2021 பற்றி எல் முருகனிடம் பேசுங்கள் என சூர்யா, கார்த்தி மற்றும் விஷாலுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

நடிகை Yashika Aannand பங்கேற்ற Chennai International Fashion Show | HD