Gayathri Raguram

Gayathiri Raguram : இதற்காகவே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக காயத்ரி ரகுராம் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக வலம் வருபவர் காயத்ரி ரகுராம். அதே சமயம் மாயா உள்ளிட்ட சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

இப்படி பல படங்களில் நடித்தும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியும் இருந்தாலும் இவரை பெரும்பாலான மக்களுக்கு தெரிய வைத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

விஜயை இயக்காமலே லாபம் பார்த்த ஒரே இயக்குனர் – அவரே வெளியிட்ட அதிரடி தகவல்.!

இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளாகி இருந்தார். இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

தனக்கும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் குறிப்பாக ஒரு குழந்தையை பெற்று கொள்ள வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் என்ன நடக்கும் என தெரியவில்லை பார்க்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.