இயக்குனர் கௌதம் மேனன் அண்மையில் அளித்த பேட்டியில் ப்ளூ சட்டை மாறன் மீது கடுப்பில் இருப்பதாக பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ப்ளூ சட்டை மாறன் மீது கடுப்பில் இருக்கும் கௌதம் மேனன்!!.. பேட்டியின் வீடியோ வைரல்.

இந்நிலையில் இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது youtube சேனல் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதனால் கடுப்பான இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது ப்ளூ சட்டை மாறன் மீது தனக்கு இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் மீது கடுப்பில் இருக்கும் கௌதம் மேனன்!!.. பேட்டியின் வீடியோ வைரல்.

அதில் அவர், ப்ளூ சட்டை மாறன் குறித்து ‘சொல்லக்கூடாதுனு நினைக்கிறேன். ஆனா எனக்கு பயங்கர கடுப்பு வருது. ஒரு படத்தை கலாய்த்து விமர்சனம் செய்வது, அவரது யூடியூப் பக்கத்தில் நிறைய பார்வையாளர்கள் பார்ப்பதற்கும், அதன் மூலம் அவருக்கு நிறைய விளம்பரங்கள் கிடைப்பதற்காகவும்தான். நீங்கள் விமர்சனம் பண்ணுங்கள். ஆனால் படத்தை கலாய்க்காமல் பண்ணுங்கள்.

ப்ளூ சட்டை மாறன் மீது கடுப்பில் இருக்கும் கௌதம் மேனன்!!.. பேட்டியின் வீடியோ வைரல்.

அவரின் திருச்சிற்றம்பலம் விமர்சனமே படத்தை முதல் 10 நிமிடங்கள் கழுவி ஊற்றுகிறார். நடுவில் ஒரு இடத்தில் படம் நன்றாக இருக்கிறது என்கிறார். அவர் மீது இறங்கி எதாவது செய்யலாமா என்ற அளவுக்கு கோபம் வருது” மற்ற இயக்குனர்களுக்கு எப்படி இருக்குன்னு தெரியல ஆனா எனக்கு உண்மையிலே இறங்கி ஏதாவது செய்யலாமான்னு இருக்கு என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.