Gautham Menon
Gautham Menon

Gautham Menon : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?

எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என கௌதம் இயக்கிய படங்கள் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் டிவிட்டரிலும் தொடர்ந்து தன்னை ஆக்டிவாக வைத்து வருகிறார்.

அவ்வப்போது தனது நண்பர்களின் பட போஸ்டர்களை டிரைலர்களை டிவிட்டரில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அந்த வரிசையில் தற்போது அவர் புதிதாக வெளியிடபோகும் படம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.

கௌதமின் உதவியாளர் வீரா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த டிரைலரை கௌதமுடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத்தும் வெளியிடுகிறார்.

டிரைலர் வெளியீட்டில் மட்டுமில்லாமல் விரைவில் இந்த கூட்டணி ஒன்றாக இணைந்து படம் செய்ய வேண்டும் என்பதும் பலரது விருப்பமாக உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.