Gautham Menon about script for Suriya
Gautham Menon about script for Suriya

கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் ஒளிந்திருக்கும் அடுத்தபட அப்டேட் குறித்து பேசியுள்ளார் கௌதம் மேனன்.

Gautham Menon about script for Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன்.

இவர் சிம்புவையும் த்ரிஷாவையும் வைத்து ஐபோன் வழியாக வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஒரு குறும்படத்தை இயக்கியிருந்தார்.

சிம்பு ரசிகர்களே வெறித்தனமான ஆட்டத்துக்கு தயாராகுங்க.. – வெளியான செம அப்டேட்!

கார்த்திக் டயல் செய்த எண் என்ற பெயரில் இக்குறும்படம் வெளியாகி மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று வருகிறது. அதேசமயம் சிம்புவை திரிஷா குழந்தை எனக் கூறிய வார்த்தை கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

இப்படியான நிலையில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் கமல் காதம்பரி என்ற பெயரில் கதை எழுதுவதாக காட்டப்படும்.

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் நடந்த அதிரடி மாற்றம் – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

அந்த கதையை நான் சூர்யாவை மனதில் வைத்து தான் எழுதினேன். இந்த கதை அவருக்கும் பிடித்துப் போய்விட்டது. விரைவில் இப்படம் உருவாகும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே சூர்யா கௌதம் மேனன் கூட்டணியில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் என்ற திரைப்படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.