Gautham Karthik Mobile Theft

சைக்கிளில் சென்ற கௌதம் கார்த்தியின் செல்போனை இரண்டு திருடர்கள் பறித்துக் கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gautham Karthik Mobile Theft : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நவரச நாயகன் கார்த்திக். இவருடைய மகன் கௌதம் கார்த்திக். இவரும் திரையுலகில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் சென்னை ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தபோது 2 மர்ம நபர்கள் அவருடைய விலையுயர்ந்த மொபைலை திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து கௌதம் கார்த்திக் போலீசில் புகார் அளிக்க போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.