Udhayanithi
சைக்கோ பட பாடலை கேட்ட கவுதம் வியந்து போயுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மிஸ்கின். இவர் தற்போது உதயநிதியை வைத்து சைக்கோ என்ற படத்தை இயக்கியுள்ளார். டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள உன்னை நினைச்சு என்ற பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருந்தது.

இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வந்த நிலையில் கவுதம் மேனன் இப்பாடல் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

அவரது பதிவில் இப்போது தான் சைக்கோ பாடல் கேட்டேன்.. ப்பா என்ன பாடல். இளையராஜா இசையில் கபிலனின் வரிகளில் பாடல் மனதை கவர்கிறது. சித் ஸ்ரீராமையும் பாராட்டியுள்ளார்.

மேலும் இப்படியொரு அழகான பாடலை கொடுத்ததற்காக மிஷ்கினுக்கு நன்றி கூறியுள்ளார். தற்போது இப்பாடல் யூ ட்யூபில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Psycho - Unna Nenachu Lyric| Udhayanidhi Stalin | Ilayaraja | Mysskin | Aditi Rao Hydari