Gautam Menon Reveals Khakka Khakka Secrets

காக்க காக்க படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா இல்லை என கௌதம் மேனன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Gautam Menon Reveals Khakka Khakka Secrets: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் காக்க காக்க.

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் முதன் முதலாக இந்த படத்தின் கதையை கௌதம் வாசுதேவ் மேனன் விக்ரமிடம் தான் கூறியுள்ளார்.

சில காரணங்களால் விக்ரம் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே கௌதம் யாரை வைத்து இயக்குவது என குழம்பி உள்ளார்.

அப்போது தான் ஜோதிகா நீங்கள் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா படத்தை பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

நந்தா படத்தை பார்த்த பிறகு தான் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தின் கதையை சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கியுள்ளார்.

இதனை கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றிலும் பழைய பேட்டி ஒன்றிலும் ஓப்பனாகவே பேசியுள்ளார்.