Gautam Menon
தல அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கிய போது நடந்த விசயத்தை பற்றி கவுதம் மேனன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் காதல் படங்களை அழகாக கொடுப்பவர் என பெயரெடுத்தவர் கவுதம் மேனன். இவர் தல அஜித்தை வைத்து எனை அறிந்தால் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நாளை என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக கொடுத்த பேட்டியில் அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

என்னை அறிந்தால் படத்தை இயக்கிய போது அஜித் அடிக்கடி என்னை அழைத்து இது உங்களோட படம். உங்கள் விருப்பப்படி இயக்குங்கள். எனக்காக எந்த மாஸ் காட்சியையும் மாற்றாதீர்கள். அஜித்தால் தான் படம் மாறியது என சொல்லி விட கூடாது என கூறியதாக பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.